பகீரதன் பல முயற்சி செய்து தங்கள் முன்னோர்களைக் கரையேற்ற கங்கையை இந்த உலகத்திற்குக் கொண்டு வருகிறான். ஆனால் அந்த கங்கையை புரூரவஸ் என்னும் முனிவர் மிக எழிதாக தான் காதில் அடித்துக் கொள்கிறார். பின்னர் அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி நிலைமையை விளக்கிய பிறகே கங்கையை வெளியே விடுகிறார் அந்த முனிவர். அதனால் தான் கங்கைக்கு ஜானவி என்றும் அழைப்பர். விசுவாமித்திர முனிவரின் தந்தையான கதி இவர் வழி வந்தவரே. இதெல்லாம் பாகவதத்தில் பதினைந்து மற்றும் பதினாறாவது பகுதியில் சொல்லப்பட்டு உள்ளது. கதி என்ற அந்த முனிவருக்கு சத்யவதி என்று ஒரு பெண். ஒரு அந்தணன் பெயர் Rcheeka இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். கதியோ ஆயிரம் குதிரை வேண்டும் அதுவும் காதுகள் கருப்பாக இருக்க வேண்டும் எனறு நிபந்தனை விதித்தார். அந்த காலத்தில் பெண்ணைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்றால் ஆண் மகன் தான் செல்வதைத் தர வேண்டும். அந்த அந்தணரும் வருண பகவானை வேண்டி அதைப் பெற்றுக் கொண்டு வந்து கொடுத்தார். சத்யவதியைத் திருமணம் செய்து கொண்டார்.
கணவனிடம் ஒரு நல்ல குழந்தை வேண்டி ஆசிர்வாதம் கேட்டாள் சத்யவதி. அவர் சத்யவதிக்கும் அவள் தாய்க்கும் தனித்தனியாக சாறுகள் கொடுத்தார். முனிவருக்குத் தெரியாமல் அவர்கள் அதை மாற்றிக் கொண்டனர். அப்போது தான் முனிவர் சொல்ல விபரீதம் புரிந்தது. அவள் புரிந்த தவறால் சத்திரியர்களைக் கொல்லும் ஒரு வீர மகன் பிறப்பான் என்பது தெரிந்தது. தனது மகன் அப்படி இருக்கக்கூடாது எனவும் பேரன் அப்படி இருக்கட்டும் என்றும் ஒரு திருத்தும் வேண்டினால் சத்யவதி. அதன் பிரகாரம் பிறந்தவர் தான் ஜமதக்னி முனிவர். ஜமதக்னி முனிவரின் மனைவி தான் ரேணுகா தேவி. இவர்களுக்குப் பிறந்தவரே பரசுராமர். சத்யவதியின் தாயாருக்குப் பிறந்தவர் தான் விஸ்வாமித்திரர் - பிரம்மரிஷி. பரசுராமரின் தந்தையான ஜமதக்னியை கார்த்தவீரியன் என்னும் பெருவீர மன்னன் கொன்று விடுகிறான். அதனால் தான் மன்னர் பரம்பரையை வேரறுக்க புறப்படுகிறார் பரசுராமர். 21 மன்னர்களின் தலையை அறுத்த பிறகு தன் தந்தையின் தலையை உடலுடன் சேர்த்து உயிர்ப்பிக்கிறார் பரசுராமர். அதுவரை ரேணுகா தேவி பொருது இருக்கிறாள்.
பரசுராமர் தந்தையின் சாபத்திலிருந்து ஒருமுறை தாயாரையும் முதலில் வெட்டி வீழ்த்தி விட்டு பின் உயிர்ப்பித்து உள்ளார். எனவே தான் மேற்குக் கடற்கரை மக்கள் பரசுராமரையும் அவரது தாயரையும் வணங்குகிறார்கள். ஏன் என்றால் மேற்கு கடற்கரைப் பகுதியான மலையாளம் மற்றும் கன்னடத்துப் பகுதிகள் கடலிலிருந்து மீட்கப்பட்ட பகுதிகள். ஆழத்தில் இருந்து வந்த மலைப்பகுதிகள். எனவே தான் அந்த பகுதிகளில் - கேரளம் மற்றும் கர்நாடகாவில் மலைகள் அதிகம் உள்ளன. அதுவும் கடற்கரையை ஒட்டி. கேரளத்தை பரசுராம சேத்திரம் என்றும் சொல்லுகிறார்கள். பெருமைப்படுகிறார்கள். இறைவனால் உருவாக்கப்பட்ட நாடு என்று சொல்கிறார்கள். பாண்டிய நாட்டில் இறைவனே ஆட்சி புரிந்திருக்கிறான். பிரம்படி பட்டிருக்கிறான். வலைவீசித் திருவிளையாடலை நடத்தி இருக்கிறான். தருமியிடம் கடிதம் கொடுத்து சேர மன்னனிடம் செல்வம் பெறும்படி கூறி உள்ளார். தமிழ் வளர்த்த சங்கத்தில் வந்து வாதிட்டு உள்ளார். நாம் இப்படிப் பெருமை பேசுவது இல்லையே. கடவுள் இல்லை கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்பவனைத் தலைவனாக கருதிப் பெருமைப் படுகிறோமே. சரி தானா குழந்தைகளே.? இறைவனுடன் கையேந்துங்கள். அவன் இல்லை என்று சொல்வது இல்லை.
தேடிச் சோறு நிதந்தின்று -பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக்
கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக்
கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை
மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ
சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக்
கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக்
கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை
மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ
இல்லை. இறைவனின் பெருமையைப் பேசுவேன். முன்னோர் பெருமையைப் பேசுவேன். முன்னோர் வழிபாடு பற்றி சொல்வேன். வந்தால் மாலை. போனால் மயிறு. இது பழமொழி மட்டும் அல்ல. முயற்சியில் தளராமல் இருக்க ஒரு தாரக மந்திரம்.
No comments:
Post a Comment