Wednesday, September 22, 2010

SEETHAI PIRANTHAAL- KULANDAIGALUKKANA KATHAIGAL

செல்வச் செழிப்பான இலங்கையில் இராவணனும் மண்டோதரியும் மிகச் சிறப்பாக இல்லறம் நடத்தினார்கள்.  மண்டோதரி கருவுற்றாள்.  இதோ குழந்தை பிறக்கப் போகிறது.  இறைவனின் ஆட்சியில் தேவர்கள் எல்லாம் அடிமைப்பட்டுக் கிடந்த நேரம்.  இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்த தேவர்கள் எப்படி விடுதலை பெறுவது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம்.  திருமால் தானே வந்து தேவர்களின் துயரைப் போக்குவதாக வாக்களித்து விட்டார்.  அவர் அவதாரம் எடுத்தால் திருமகளும் அவதாரம் எடுக்க வேண்டுமே.  திருமகளே இராவணன் இல்லத்தில் அவதரித்தாள் குழந்தையாக.   சாதகத்தைக் கணிக்கச் சொன்னான் இராவணன்.  விடுவார்களா தேவர்கள்.   "இராவணா இராவணா இந்த குழந்தை பிறந்த நேரத்தில் உள்ள பலாபலன்கள் உனக்குச் சாதகமாக இல்லை.   எனவே இந்த குழந்தையை இல்லத்தில் வைத்திருக்கக் கூடாது.   இந்தக் குழந்தை இருந்தால் உனக்கு மரணம் ஏற்படும்.  எனவே இதைக் கொன்று விட வேண்டும்" என்றார்கள்.  குழந்தையின் அழகிய முகத்தைக் கண்டான் இராவணன்.  குழந்தை இராவணனைப் பார்த்து சிரித்தது.  மண்டோதரி - குழந்தையின் தாய் குழந்தையைத் தர மறுத்தால்.  எறும்பு ஊற ஊறக் கல்லும் கரையும் என்பார்கள்.  தேவர்கள் விடுவதாக இல்லை.  இலங்கேஸ்வரனின் மனதை மாற்றினார்கள்.  மரணம் அவனை எதிர்கொள்ள வேண்டும் என்பது விதியாக இருக்கும் போது அவன் என்ன செய்ய முடியும்?   தன் மனைவியை சமாதனப் படுத்தினான்.   அவன் மனைவியோ சிரிக்கும் அழகிய பெண் குழந்தையைக் கொல்ல ஒப்புக் கொள்ளவே இல்லை.  "சரி ஒரு பெட்டியில் வைத்து கூடவே வைர-வைடூரியங்கள் வைத்து நீரில் விட்டு விடலாம்" என்றான்.  விதி விளையாடியது.   மண்டோதரியும் ஒத்துக் கொண்டாள்.  நீரிலே அழகிய பெட்டியை மிதக்க விட்டார்கள்.  எங்கே போகும் இந்தப் பெட்டி?  யார் கையில் கிடைக்கும். "தாத்தா தாத்தா என்ன ஆச்சு சொல்லுங்க தாத்தா?" பேத்தி ஹரிணி தாத்தாவைக் கேட்டாள்.   இன்னைக்கு நீ தூங்கு.  நாளைக்கு பெட்டி எங்கே போச்சுன்னு சொல்றேன்.  தாத்தா அமர்நாத் சொன்னார்.  நீங்களும் தூங்குங்கள் குழந்தைகளே.  நாளைக்குப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment