அயோத்தி அயோத்தி என்னு ஒரு ஊரு இருந்துச்சாம். அது ஊரு இல்லே. பெரிய நகரம். மாட மாளிகைகள் இருந்த பெரிய நகரம். அதை தசரதன் என்று ஒரு சக்கரவர்த்தி ஆண்டு கொண்டு வந்தார். அவர் பெரிய வீரர். அவருக்கு ஏராளமான மனைவிகள். ஆனால் குழந்தைகள் இல்லை. எனவே அவர் தன்னுடைய குல குருவிடம் ஆலோசனை கேட்டார். குலகுரு சொன்னமாதிரி ஒரு யாகம் நடத்தினார்கள். அதிலிருந்து ஒரு கடவுள் வந்து ."தசரதா, மகிழ்ந்தேன். இந்தா உனக்கு ஒரு கூஜா நிறைய பாசம். இதை உன் மனைவிக்குக் கொடு. குழந்தைகள் கிடைக்கும்" என்று கூறி மறைந்தது. இந்தா சந்தற்பதிர்ககத் தான் திருமால் காத்துக் கொண்டிருந்தார். அவர் மட்டும் வர முடியுமா? தேவியை ஏற்கனவே
அனுப்பி விட்டார். இப்போ இவர் வரணும்னா பாம்புப் படுக்கையை என்ன செய்யிறது? சங்கு சக்கரத்தோடு போக முடியுமா? அவர்களுக்கும் ஒரு வழி காட்டணும். அவர் தான் மாயா நாடகத்தைத் துவக்கினார். தசரதனுக்கு ஆயிரக்கணக்கில் மனைவிகள் இருந்தாலும் பட்டத்து இராணிகள் மூன்று பேர் தான். அவர்கள் கோசலை, கைகேயி, சுமித்திரை. இங்கே பாருங்கடா மிதிலையில் பிறந்தால் மைதிலி என்கிறார்கள் - அதுபோல கோசல நாட்டில் பிறந்த பெண் என்பதால் கோசலை, கேகய நாட்டில் பிறந்ததால் கைகேயி. ஒருவேளை சுமத்திரா தீவில் பிறந்ததால் சுமிதிரையோ என்னவோ தெரியல்லே. தசரதர் ஒரு பாதியை கோசலைக்கும் இன்னொரு பாதியை கைகேயிக்கும் கொடுத்தார். ஏனோ தெரியல்லே சுமுத்திரைக்குக் கொடுக்கல்லே. விடுவாங்களா இரண்டு பேரும். கடவுள் மாயா விளையாட்டு நடக்குது. இருவரும் தங்கள் தங்கள் பகுதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் சுமித்திரைக்குக் கொடுத்தார்கள்.
மூவரும் கருவுற்றார்கள். கோசலைக்கு இராமர் பிறந்தார். கைகேயுக்கு பரதன் பிறந்தான். சுமுத்திரைக்கு இலக்குவனும் சத்ருக்கனனும் பிறந்தார்கள். கோசலை கொடுத்ததை உண்டதால் இலக்குவன் பிறந்தான். எனவே இராமர் பின்னாலே சுற்றினான். கோசலை கொடுத்த பாசத்தால் பிறந்தவன் சத்ருக்கினன். எனவே அவன் பரதனோடு சுற்றினான். புரிந்ததா குழந்தைகளே? நாளைக்குப் பாப்போம்.
No comments:
Post a Comment